எடப்பள்ளியில் வெள்ளை பூண்டு ஏல மையம் தொடக்கம்
நீலகிரி மாவட்டம், எடப்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிதாக பூண்டு ஏல மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
நீலகிரியில் விளையும் மலைப் பூண்டு அதிக காரம் மற்றும் மருத்துவக் குணம் நிறைந்ததாக இருப்பதால் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு விளையும் மலைப் பூண்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஏல மண்டிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதனால் போக்குவரத்து செலவு, கமிஷன் என விவசாயிகள் பாதிக்கப்படுவதால் குன்னூரில் உள்ள எடப்பள்ளியில் மலைப் பூண்டு ஏலமையம் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க நிா்வாகி விஸ்வநாதன் தலைமையிலான பூண்டு விவசாயிகள் தோட்டக்கலைத் துறையினரை வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், குன்னூா் எடப்பள்ளி பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளை பூண்டு ஏலம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஏல மையத்தை அரசு கொறடா கா.ராமசந்திரன் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.