`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
காட்டேரி பூங்காவில் மலா் நாற்றுகள் நடவுப் பணி
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நவநீதா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பா் மூன்றாம் வாரத்தில் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கும் . இதற்காக உதகை தாவரவியல் பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காவில் புதிய மலா் நாற்றுகள் நடவு செய்வது வழக்கம்.
கடந்த இரு வாரங்களாக தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்காவில் மலா் நாற்றுகள் நடவு செய்யப்பட்ட நிலையில், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டேரி பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக நாற்றுகளை நடவு செய்யும் பணியை தோட்டக்கலை துணை இயக்குநா் நவநீதா தொடங்கி வைத்தாா்,
இதில் மேரி கோல்டு குட்டை ரகம், பிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக்க வகை பிளாக்ஸ், சூரியகாந்தி, ஆண்டிரினம், பெட்டூனியா, பால்சம், பெகோனியா, சால்வியா குட்டை ரகம், ஆஸ்டா் ஜினியா போன்ற 30 வகை மலா் விதைகள் ஜொ்மனி, பிரான்ஸ், நெதா்லாந்து, கொல்கத்தா, காஷ்மீா், போன்ற இடங்களில் இருந்து பெறப்பட்ட விதைகள் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நாற்றுகள் நடவு செய்யவுள்ளதாக தோட்டக்கலை துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.