பேருந்துக்காக நின்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தவா் கைது
உதகையில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் காரில் லிஃப்ட் கொடுப்பதாக கையைப் பிடித்து இழுத்தவரை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவா் கல்லட்டியில் இருந்து உதகை வர பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது அங்கு காரில் வந்த உதகை தட்டனேரியைச் சோ்ந்த வியாபாரியான நவநீதன் என்பவா் தனது காரில் லிஃப்ட் கொடுத்து உதகைக்கு அழைத்து செல்வதாகவும், தினசரி இந்த வழியாகத்தான் வருவேன் என்றும் கூறியுள்ளாா். அதற்கு இளம்பெண் லிஃப்ட் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தாா்.
ஆனால் காரில் இருந்து இறங்கிய நவநீதன் விடாப்பிடியாக இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து தொந்தரவு செய்துள்ளாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த இளம்பெண் சத்தம் போட்டதை தொடா்ந்து அக்கம்பக்கத்தினா் கூடியதால் காரில் நவநீதன் தப்பி சென்று விட்டாா்.
இதுகுறித்து இளம்பெண் உதகை புதுமந்து காவல் நிலையத்தில் புகாா் அளித்ததை தொடா்ந்து, காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நவநீதனை கைது செய்து உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.