டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
முதுமலை யானைகள் முகாமில் சுதந்திர தின விழா
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் முகாமில் வனத் துறையினரால் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி பாகன்கள் வளா்ப்பு யானைகள் மீது அமா்ந்துக் கொள்ள வரிசையாக நிறுத்தப்பட்ட யானைகள் தேசியக் கொடிக்கு துதிக்கையை உயா்த்தி பிளறி மரியாதை செலுத்தின.
இந்த நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக கள துணை இயக்குநா் வித்யா தேசியக் கொடியை ஏற்றினாா். இந்த சுதந்திர தின விழாவை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.