மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கோத்தகரி அருகே அரசுப் பேருந்துவை வழிமறித்த காட்டு யானை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ்த்தட்டப்பள்ளம் சாலையில் வந்த அரசுப் பேருந்தை ஒற்றை யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கீழ்த்தட்டபள்ளம் பகுதியில் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது.
இந்நிலையில் வனப் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியேறி ஒன்றை யானை கீழ்த்தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சுற்றி வந்தது. அப்போது, அவ்வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றது. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி சென்ற அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்தது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்த நிலையில், ஓட்டுநா் சாதுரியமாக யானையிடமிருந்து பேருந்தை இயக்கி அங்கிருந்து சென்றாா்.
இந்த யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.