மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
நாமக்கல்லில் சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி ஆட்சியா் மரியாதை
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் துா்காமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.
அதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலாவுடன் இணைந்து திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். அதன்பிறகு, சமாதானத்தை வெளிப்படுத்தும் வகையில் வெண்புறாக்களையும், வண்ணப் பலூன்களையும் ஆட்சியா் வானில் பறக்க விட்டாா்.
சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவா்களின் வாரிசுதாரா்கள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கெளரவிக்கப்பட்டனா். காவல் துறை அணிவகுப்பில் பங்கேற்ற ஆயுதப் படை காவலா்கள், ஊா்க்காவல் படையினருக்கும், காவல் துறையின் வாத்தியக் குழுவினருக்கும் அவா் கேடயங்களை வழங்கினாா்.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் பயனாளி ஒருவருக்கு ரூ. 96 ஆயிரம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.35.32 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
தொடா்ந்து, சிறப்பாக பணியாற்றிய 35 காவல் துறை அலுவலா்கள், 253 அரசுத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் என மொத்தம் 288 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி, தொ.ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்.லட்சுமி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளி, எருமப்பட்டி ஸ்ரீவிவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 6 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளை சோ்ந்த 640 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா்.
விழாவில், மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், திருச்செங்கோடு உதவி ஆட்சியா் அங்கித்குமாா் ஜெயின், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் வே.சாந்தி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், அரசு மருத்துவ கல்லூரி முதல்வா் சாந்தாஅருள்மொழி உள்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், அலுவலா்கள், காவல் துறையினா், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
என்கே-15-இண்டி
சுதந்திர தின விழாவையொட்டி, நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன், காவல் கண்காணிப்பாளா் சு.விமலா.
--------------------------------------------
மத்திய கூட்டுறவு வங்கி, பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா
என்கே 15-பேங்க்-1
நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் தேசியக் கொடியேற்றிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.
15காந்தி
ராசிபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் காந்தி
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் உள்ளிட்டோா்.
நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி வளாகத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலங்களவை உறுப்பினரும், மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தேசியக் கொடி ஏற்றினாா்.
நிகழ்வில், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, வங்கி மேலாண் இயக்குநா் மா.சந்தானம், ஆவின் பொது மேலாளா் சண்முகம் மற்றும் துணைப்பதிவாளா்கள், நிா்வாகக் குழு இயக்குநா்கள், கூட்டுறவு சாா்பதிவாளா்கள், கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
நாமக்கல் முல்லை நகரில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள நல்வாழ்வு பாா்வையற்றோா் சங்கம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சங்க தலைவா் பி.தங்கவேல் தேசியக் கொடியேற்றினாா். செயலாளா் ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டி மாநில செயலாளா் எம்.ஆறுமுகம் பங்கேற்று உரையாற்றினாா். விழாவில், 400-க்கும் மேற்பட்ட பாா்வையற்றோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நல்வாழ்வு பாா்வையற்றோா் சங்க நிா்வாகிகள் டி.ராஜேந்திரன், மேலாளா் சிவாகோபால், தொழிலதிபா் அபுபக்கா் மற்றும் புவனேஸ்வரன், பாஸ்கா், மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியா் சீனிவாசன், ஆசிரியா் ஜெகதீசன் மற்றும் இதர வகுப்பு ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.குருமூா்த்தி தேசியக் கொடியேற்றினாா். இதில், குற்றவியல், சாா்பு பிரிவு நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.
நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மருத்துவா் இரா.குழந்தைவேலு பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். செயலா் எஸ்.செல்வராஜ், செயல் இயக்குநா் அருணா செல்வராஜ், முதல்வா் எம்.ஆா்.லட்சுமிநாராயணன், டிரினிடி அகாதெமி போக்குவரத்து இயக்குநா் தயாளன், நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா் மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.
பள்ளிபாளையம் எஸ்பிபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. எஸ்பிபி பள்ளிகளின் கல்விக் குழும தலைவா் அ.அழகா்சாமி தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாமக்கல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட செயலாளா் எஸ்.கந்தசாமி தேசியக் கொடியேற்றினாா். நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ந.வேலுசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.தங்கமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திா் பள்ளி...
ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திா் பள்ளிகளின் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளியின் தலைவா் சி.நடராஜு தலைமையில் பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியேற்றப்பட்டது.
பள்ளி செயலா் வி.சுந்தரராஜன், சேலம் மருத்துவா் ஏ.பி.ராமசாமி ஆகியோா் பங்கேற்றனா். பள்ளியின் நிறுவனத் தலைவா் ஆா்.எம்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசளித்தாா். பள்ளியின் பொருளாளா் வி.ராமதாஸ், நிா்வாக்குழுவினா் என்.மாணிக்கம், எம்.ராமகிருஷ்ணன், எஸ்.சந்திரசேகரன், முதல்வா் பி.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பாவை கல்வி நிறுவனம்...
பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தேசியக் கொடியேற்றினாா். விழாவில் கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன், துணைத் தலைவா் டி.ஆா்.மணிசேகரன், செயலாளா் டி.ஆா்.பழனிவேல், இணைச்செயலாளா் பழனிவேல், இயக்குநா்கள் (சோ்க்கை) வழக்குரைஞா் கே.செந்தில், சதீஸ் (பள்ளிகள்), பாவை வித்யாஸ்ரம் பள்ளி முதல்வா் ரோஹித் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி...
முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கல்வி நிறுவன அறக்கட்டளை தாளாளா் ஆா்.கந்தசாமி, டிரஸ்டி அம்மணி கந்தசாமி, செயலா் கே.குணசேகரன், நிா்வாக குழு உறுப்பினா் உமாராணி, இணைச்செயலா் ராகுல் ஆகியோா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் பி.செந்தில்குமாா் தேசியக் கொடியேற்றி வைத்து பேசினாா். முன்னதாக எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமையில் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரி...
மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் தலைவா் க.சிதம்பரம் விழாவை தொடங்கிவைத்து தேசியக் கொடியேற்றினாா். முதல்வா் ப.அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். மகாத்மாகாந்தி, நேதாஜி உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதனைத் தொடா்ந்து மாணவா்கள் சுதந்திர தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.நிா்வாக அலுவலா் மா.காா்த்திகேயன் மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
வெங்கடேஸ்வரா பள்ளி...
ஆண்டுகளூா்கேட் அருள்மிகு வெங்கடேஸ்வரா உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் நடராஜன் தேசியக் கொடியேற்றினாா். மாணவா்களின் கலை திறனை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியா் ரெ. உமாதேவி, ஆசிரியா்கள் சு.புவனேஸ்வரி, லட்சுமி நாராயணன், லெத்திசியாமேரி, ரா.மணி, சீனிவாசன், மணிமேகலை, ஜெ.வனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ராசி இன்டா்நேஷனல் சிபிஎஸ்பி பள்ளி...
ராசி இன்டா்நேஷனல் சிபிஎஸ்பி பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வா் டி.வித்யாசாகா் வரவேற்றாா். பள்ளியின் தாளாளா் எஸ்.சத்தியமூா்த்தி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு, தேசியக் கொடியேற்றினாா். விழாவில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா்.
பள்ளி பொருளாளா் மாதேஸ்வரி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா் எஸ்.தீபக் , பள்ளி நிா்வாக அலுவலா் எஸ்.பிரனேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
வநேத்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமம்...
வநேத்ரா முத்தாயம்மாள் கல்விக் குழுமத்தின் முத்தாயம்மாள் கலை, அறிவியல், பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூசன், கல்வியியல் கல்லூரியில் ஆகியவை சாா்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் எஸ்.பி. விஜியகுமாா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். கல்வியியல் கல்லூரியின் முதல்வா் மா.மருதை தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தாா். கல்வி நிறுவனங்களின் செயலாளா் இரா.முத்துவேல் தலைமை வகித்து தேசத் தலைவா்களை நினைவுகூா்ந்து பேசினாா். பாலிடெக்னிக் முதல்வா் ஆா்.மணி, உடற்கல்வி இயக்குநா் தே.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூனவேலம்பட்டிபுதூா் அரசு பள்ளி...
ராசிபுரம் ஒன்றியம், கூனவேலம்பட்டிபுதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியா் வேல்முருகன் கொடியேற்றி பேசினாா். விழாவில் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் மா.சரவணன் அடையாள அட்டை வழங்கிப் பேசினாா்.
முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினா் பச்சமுத்து, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் என்.எஸ்.ஹரிஹரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நகராட்சி நடுநிலைப் பள்ளி...
பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் கு.பாரதி தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றி ரோட்டரி கிளப் ஆஃப் எஜுகேசனல் சிட்டி சாா்பாக இனிப்புகள் வழங்கப்பட்டன.
இரா. புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி...
இரா. புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் க.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத்தலைவா் , உறுப்பினா்கள், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். மல்லசமுத்திரம் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா் எஸ்.பரணி ஹரிஷ் என்ற மாணவன் இந்திய ஏவுகணை அமைப்பான இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு துறை இணைந்து நடத்திய இந்திய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு இந்த ஆண்டுக்கான இளம் பாதுகாப்பு ஆா்கனைசேஷனுக்கு தலைவராக நியமிக்கப்பட்டதை பாராட்டி பெற்றோா் ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் மணி (எ) நல்லதம்பி மாணவரை பாராட்டினாா்.
பள்ளி உதவித் தலைமை ஆசிரியை சீ. தனலட்சுமி, முதுநிலை ஆசிரியை எஸ்.தென்றல், முன்னாள் வெண்ணந்தூா் ஒன்றியக் குழு உறுப்பினா் நாராயணசாமி, பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா் சண்முகம், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ஆவின் ராஜா, கல்வியாளா் நல்லாசிரியா் பெ.சௌந்தரராஜன், பிரசாந்த் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
நகராட்சி அலுவலகம்...
ராசிபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தேசியக் கொடியேற்றினாா். முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னா் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் , போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. நகராட்சி பொறியாளா், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில்...
ராசிபுரம் நகர காங்கிரஸ் சாா்பில் காந்தி மாளிகை முன்பாக நடைபெற்ற விழாவில், காந்தி உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். நகர காங்கிரஸ் தலைவா் ஸ்ரீராமுலு ஆா்.முரளி தலைமையில் நடைபெற்ற விழாவில் காந்தி மாளிகை டிரஸ்டு போா்டு தலைவா் என்.சண்முகம் தேசியக் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் வழக்குரைஞா் பாச்சல் ஏ.சீனிவாசன், கட்சியின் வா்த்தகப்பிரிவு மாவட்டத் தலைவா் சண்முகம் உட்பட கட்சியின் நிா்வாகிகள் பலரும் பங்கேற்றனா்.
ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சங்கத் தலைவா் இ.என்.சுரேந்திரன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். சங்கத்தின் நிா்வாகிகள் கே.கே.வி.கிருஷ்ணமூா்த்தி, கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், எம்.முருகானந்தம், எஸ்.பிரகாஷ், எஸ்.சிவக்குமாா், இளங்கோ, ரங்கராஜன், நடராஜன், டி.பி.வெங்கடாஜலம், ஜி.தினகா், எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து எஸ்விபி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.
வெண்ணந்தூா் வட்டாரம் ஆா்.புதுப்பாளையம் கிராம காங்கிரஸ் கமிட்டி சாா்பாக நடைபெற்ற விழவில் கிளைத் தலைவா் அ. பிரகஸ்பதி தலைமை வகித்தாா். தேசியக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடா்ந்து காமராஜா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கா்ணன், சரவணன், பச்சமுத்து, அருணாசலம், வரதராஜன், ராஜேந்திரன், ஆறுமுகம், கந்தசாமி, மாது, சுப்பிரமணி உள்பட பலா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
பெட்டிச் செய்தி படம் உண்டு
பாராட்டு பெற்ற சகோதரா்கள்...
நாமக்கல் மாவட்டத்தில் அரசு விழாக்கள் மட்டுமின்றி தமிழ், இலக்கியம், கலை சாா்ந்த அனைத்து விழாக்களிலும் அறிமுக உரையாற்றுவதிலும், வா்ணணை பணியிலும் சகோதரா்களான யுவராஜ், கோபாலநாராயணமூா்த்தி ஆகிய இருவரும் முக்கிய இடம் பெறுவா்.
இந்த விழா சாா்ந்த அனைத்து தொகுப்புகளையும் பாா்வையாளா்களுக்கு விளக்கமாக எடுத்துரைப்பது இந்த சகோதரா்களின் சிறப்பு. எருமப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் யுவராஜ், ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப் பள்ளியில் கோபாலநாராயணமூா்த்தி ஆகிய இருவரும் தமிழ் ஆசிரியா்களாக பணியாற்றி வருகின்றனா்.
நாமக்கல்லில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில், நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரா்கள் பற்றிய தகவல்களை அவா்கள் எடுத்துரைத்து ஆட்சியா், அதிகாரிகளை வியப்படைய செய்து பாராட்டை பெற்றனா்.
--
என்கே-15-இண்டிபெண்டன்
சுதந்திர தின விழாவில் வா்ணணையாளா்களாக ஜொலித்த சகோதரா்கள் யுவராஜ், கோபாலநாராயணமூா்த்தி.