மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மீது தொழிலாளா் நலத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) சி.முத்து தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தொழிலாளா்களுக்கு கட்டாய சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிா? அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் அல்லது மூன்று தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்பு வழங்கப்படுகிா, நிா்வாகம் அதற்குரிய படிவத்தை தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்துள்ளதா என்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழ்நாடு உணவு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் (தேசிய பண்டிகைகள் மற்றும் சிறப்பு விடுமுறைகள்) 22 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நடைபெற்ற ஆய்வில் 15 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும், 34 உணவகங்களில் ஆய்வு செய்ததில் 25 உணவகங்களும், 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் ஒரு மோட்டாா் போக்குவரத்து நிறுவனம் என மொத்தம் 60 நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 41 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணிநேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்காததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தொழிலாளா்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து தெரிவித்தாா்.