செய்திகள் :

நாமக்கல்: 310 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 310 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்து பேசியதாவது:

கிராமப்புற மக்களிடையே அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையிலும் குடியரசு தினம், தொழிலாளா் தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தியடிகள் அவா்களின் பிறந்த தினம், உலக தண்ணீா் தினம், உள்ளாட்சிகள் தினம் ஆகிய தினங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

இந்திய நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள்தான். பொருளாதார வளா்ச்சிக்கு கிராம பொருளாதாரமே முக்கிய அடிப்படை காரணமாக உள்ளது. அந்த வகையில், 310 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

சாலைவசதி, மின் விளக்கு, குடிநீா் வசதி, அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கிராமசபை கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது.

கலைஞரின் கனவு இல்லம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உயா்கல்வி படிக்க மாதம் ரூ.1,000- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், கூட்டுறவு துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசின் அனைத்து திட்டங்களை அறிந்து முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், தனித்துணை ஆட்சியா்(சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், வேளாண்மை இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி, முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

-

என்கே-15-கிராமசபா

எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 41 கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மீது தொழிலாளா் நலத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) சி.முத... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றி ஆட்சியா் மரியாதை

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் துா்காமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து ம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம்

தோ்தல் ஆணையம், மத்திய அரசுக்கு எதிராக நாமக்கல்லில் காங்கிரஸாா் மெழுகுவந்தி ஏந்தி ஊா்வலத்தில் ஈடுபட்டனா். பிகாரில் போலி வாக்காளா்கள் அதிகளவில் உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி, அதற்கான தகவல்களை வெ... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக ஆட்சிக்கு 50 மதிப்பெண்கள் மட்டுமே அளிக்க முடியும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த இரண்டு நாள்களாக ‘மக்களைத் தேடி மக்கள் ... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட பல்வே... மேலும் பார்க்க

நாமக்கல்: மின் பாதையில் கவிழ்ந்த கிரேனால் கட்டடத்துக்கு வண்ணம் தீட்டிய 3 போ் உயிரிழப்பு

நாமக்கல் அருகே தனியாா் மருத்துவமனை கட்டடத்துக்கு வண்ணம் பூசுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கிரேன் கவிழ்ந்து மின் பாதையில் விழந்ததில் 3 தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். நாமக்கல்- திருச்சி தேச... மேலும் பார்க்க