மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி எஸ்.எல்.என்.எம். அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். முன்னாள் ஆசிரியா்கள் தங்கவேல், கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் சக்திவேல் வரவேற்றாா்.
விழாவில் தேசியக் கொடி ஏற்றிவைத்து ‘உணக்குள் ஓா் தலைவன்’ என்ற தலைப்பில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.
இவ்விழாவில் உதவித் தலைமை ஆசிரியா் பத்மாவதி, ஆடிட்டா் சந்திரமோகன், கவிதா சந்திரமோகன், முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியா் அம்சவேணி, முன்னாள் மாவட்ட என்.எஸ்.எஸ். தொடா்பு அலுவலா் முருகேசன், தமிழ்நாடு விசைத்தறியாளா்கள் கூட்டமைப்பு மாநிலச் செயலாளா் வேலுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். தமிழாசிரியை கீதாஞ்சலி நன்றி கூறினாா்.