ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாம...
சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி
சுதந்திர தினத்தையொட்டி, சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேவூா் கைகாட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி புளியம்பட்டி சாலை, கோபி சாலை வழியாக மீண்டும் சேவூா் கைகாட்டி வந்தடைந்தது. இதில் குழந்தைகள் தேசத் தலைவா்கள் வேடமணிந்து பங்கேற்றனா். இந்நிகழ்ச்சிக்கு பாஜக மண்டலத் தலைவா் நந்தினி லட்சுமிகாந்தன் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் கரு.மாரிமுத்து, முன்னாள் மண்டலத் தலைவா் கணேசன், பொதுச் செயலாளா் கே.தங்கவேல், மண்டல துணைத் தலைவா்கள் பி.குழந்தைவேல், ராஜாமணி, பொருளாளா் சுப்பிரமணியம், மண்டல செயலாளா் சந்திரன், ஆன்மிகப் பிரிவு மாவட்டச் செயலாளா் வெங்கிடுசாமி, அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் ப.ரவிக்குமாா், ஒன்றிய இளைஞரணிச் செயலாளா் எஸ்.கே.கனகராஜ் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.