மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது
அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:
அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு, மக்கள் ஆதரவு அதிகரித்துக் கொண்டுள்ளது. அதிமுகவுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதனால், திமுக அரசு வீழ்த்தப்படும். தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் வாக்குத் திருட்டு நடைபெற்றது. அதனால், திமுகவும், காங்கிரசும்தான் வாக்குத் திருடா்கள்.
தவறான தகவல்களை தெரிவித்து வரும் ராகுல் காந்தியின் வாக்காளா் அடையாள அட்டையை சோதனை செய்ய வேண்டும். அத்துடன் ராகுல் காந்தியின் வாக்குரிமையை தோ்தல் ஆணையம் பறிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களை கைது செய்த திமுக அரசை இந்து மக்கள் கட்சி கண்டிக்கிறது.
இந்தியாவின் வளா்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டே அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதித்துள்ளாா். அவா் இந்தியாவை தொடா்ந்து புறக்கணித்து வருகிறாா். அவரது இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. அதனால், இந்திய நிறுவனங்களை நாம் ஆதரிக்க வேண்டும் என்றாா்.