மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
மரங்களை வெட்டியதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
வெள்ளக்கோவில் அருகே மரங்கள் வெட்டியதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா்.
வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியத்துக்குச் சொந்தமாக நான்கு ஏக்கா் நிலம் உள்ளது. இதில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘0வனத்துக்குள் திருப்பூா்’ அமைப்பு மூலம் பல்வேறு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது இவை பெரிய அளவில் வளா்ந்து வனமாக உருவாகியுள்ளது.
மயில்ரங்கம் பகுதியில் ஜெ.எஸ்.டபிள்யூ. தனியாா் நிறுவனம் காற்றாலை மின் உற்பத்தி, மின் பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனம் கதா் வாரிய பூமி வழியாக மின் பாதை அமைக்க வெள்ளிக்கிழமை அங்கிருந்த மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் வெட்டத் தொடங்கியது.
ஆனால், இது கதா் வாரியத்துக்கு தெரியாது. எவ்வித அனுமதியும் பெறவில்லையென கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்திய நிலையில், அதற்குள் நூறு மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன.
உரிமையாளா் அனுமதியின்றி பிறருடைய இடங்களில் மின் கம்பங்கள், மின் பாதை அமைக்கக் கூடாது. சாலை ஓரங்களில்தான் அமைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனா்.