Jessica Radcliffe : Trainer-ஐ தாக்கிக் கொன்றதா Dolphin? Orca | Ramky Group Imper...
போட்டியின்றி தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை: ஜெ.பி. நட்டா
குடியரசு துணைத் தலைவர் தேர்தலை, போட்டியின்றி நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பாஜக மூத்த தலைவர்கள் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என ஜெ.பி. நட்டா இன்று (ஆக. 17) அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் ஜெ.பி. நட்டா பேசியதாவது,
''மகாரஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவருக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்தலை உறுதி செய்வதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் நாம் பெற வேண்டும். நாங்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளோம்; எங்களின் மூத்த தலைவர்கள் முன்பே அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இப்போதும் கூட, நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவுப்படி, துணை குடியரசுத் தலைவருக்கான எங்கள் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்