“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம...
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியைச் சோ்ந்தவா் அனீஸ் (24). இவா் கீழ்விஷாரம் பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில்,ஞாயிற்றுக்கிழமை மாலை கடையில் வேலை செய்தபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு, மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் அனீஸ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.