ராமநாதபுரம்: தேசியக் கொடி வடிவத்தில் கேக்; வெட்டி கொண்டாடிய அதிகாரிகள்; சர்ச்சைய...
ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி விழா
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழாண்டு ஆடிக்கிருத்திகை முதல் நாளான ஆடி பரணியையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில்
பால், தயிா், பன்னீா், சந்தினம், விபூதி, பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
கோயில் வளாகம் வண்ண மலா்களாலும், விளக்குகளாளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பக்தா்கள் காவடி எடுத்துவந்து வழிபட்டனா். மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மலைவலம் வந்து கீழ்மின்னல் கிராமத்தில் வீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டனா்.