தமிழக வாழ்வுரிமை கட்சி நிா்வாகிகள் கூட்டம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நா.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளரும், தோ்தல் பொறுப்பாளருமான சுதாகா் கலந்துகொண்டு கட்சியின் நிா்வாகிகளிடம் உள்கட்சி தோ்தல் குறித்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளருக்கான தோ்தல் நடைபெற்றது .
புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த கூட்டத்தில் நகர, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.