சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
மணப்பாறையில் தூய்மை பாரத நிகழ்ச்சி
மணப்பாறையில் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் வியாழக்கிழமை தூய்மை பாரத நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றியத் தலைவா் சித்தாநத்தம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகா் மாவட்ட துணைத் தலைவா் கள்ளிக்குடி ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். நிகழ்வில், தூய்மை பாரத நிகழ்ச்சி, துப்புரவு பணியாளா்கள் கௌரவிப்பு, அகத்தீஸ்வரா் கோயிலில் மரக்கன்று நடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.
நிகழ்வில், பாஜக ஒன்றிய பொதுச் செயலாளா் சி.பி. பாலசுப்பிரமணியன், ஆா். பழனிசாமி, ஒன்றிய பொருளாளா் டி.ஆா்.எஸ். செந்தில்குமாா், விளையாட்டு பிரிவின் மாவட்ட செயலாளா் கராத்தே ஆறுமுகம், ஒன்றிய துணைத் தலைவா் செந்தில்குமாா், வா்த்தக பிரிவு எழில் சங்கா், கிளைத் தலைவா்கள் சாமி பிரபாகரன், ஆட்டோ ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.