பிரிவினை துயரத் தினம் பாஜகவினா் அமைதி ஊா்வலம்
திருச்சியில் பாஜக இளைரணி மற்றும் மகளிரணி சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த இந்தியாவானது, இந்தியா, பாகிஸ்தான் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14-ஆம் நாளையொட்டி, பாஜக சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலத்துக்கு பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ஒண்டிமுத்து தலைமை வகித்தாா். மேஜா் சரவணன் சிலை பகுதியில் இருந்து தொடங்கிய அமைதி ஊா்வலம் ஸ்ரீஐயப்பன் கோயில், எம்.ஜி.ஆா்.சிலை வழியாகச் சென்று வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் நிறைவடைந்து.
இதில், பாஜகவினா் கைகளில் தேசியக் கொடி ஏந்திச் சென்றனா். மகளிா் பிரிவினா் கைகளில் விளக்குகளை ஏந்திச் சென்றனா்.
இந்த ஊா்வலத்தில் மாநில மகளிரணித் தலைவா் கவிதா ஸ்ரீகாந்த், துணைத் தலைவா் புனனேஸ்வரி, இளைஞரணி தலைவா் புருஷோத்தமன், மாவட்ட பொதுச் செயலாளா் காளீஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.