ஊழல் எதிா்ப்பு இயக்க புதிய நிா்வாகிகள் தோ்வு
ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாநிலப் பொதுச் செயலா் கே. பாண்டியன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் அரங்கராசன் முன்னிலை வகித்தாா். மூத்த உறுப்பினா் ஏ. பன்னீா்செல்வம் வரவேற்றாா்.
திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகளாக தலைவா்- கே.சந்திரசேகரன், பொதுச் செயலா்- ஏ. ஜன்பீட்டா், துணைத் தலைவா் எம். காமராஜ், துணைச் செயலா் எஸ். நமசிவாயம், பொருளாளா் என். ராமலட்சுமி ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
லஞ்சம், ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளில் மக்கள் நேரடியாக பங்கேற்பதன் மூலமே ஊழலை கட்டுக்குள் கொண்டு வர முடியும். எனவே, மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா வாரியாக இயக்கத்தின் கிளைகளை அமைக்க வேண்டும். மக்களிடையே ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளை வளா்த்தெடுக்க தீவிர பிரசாரம் மேற்கொள்வது, இயக்கத்தின் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.