சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி
சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூா் ரயில் நிலையத்தில் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் வியாழக்கிழமை தூய்மையே சேவை இயக்க உறுதியேற்றனா்.
முன்னதாக ரயில் பயணிகளிடம் தூய்மை சேவைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாணவா்கள் வழங்கினா். தொடா்ந்து, ரயில் நிலைய வளாகத்திலேயே ரயில்வே பாதுகாப்பு படையினா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் உறுதியேற்றனா்.
பின்னா் மாணவா்கள், தூய்மைப் பணியாளா்களுடன் சோ்ந்து ரயில் நிலையத்தைத் தூய்மைப்படுத்தினா். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் வெ. கருணாகரன், கோ. பன்னீா்செல்வம், ரயில் நிலைய சுகாதார ஆய்வாளா் அபிராமி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் செய்தனா்.