"மனித உரிமை மீறல்; மூர்க்கத்தனமான அரசு நடவடிக்கை" - திமுக அரசின் செயலுக்கு CPIM ...
திருவாரூரில் காதலியும், அரியலூரில் காதலனுன் தூக்கிட்டு தற்கொலை
அரியலூா் மாவட்டம், தா.பழுா் அருகே காதலனும், திருவாரூரில் காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தா.பழூா் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் மகன் யுவராஜ்(26). இவா், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இவருக்கும், அரியலூா் மாவட்டம், சோழமாதேவி கிராமத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகளான திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிஎஸ்சி ரேடியாலஜி முதலாம் ஆண்டு படித்து வந்த சுமத்ரா (19) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்துள்ளனா்.
இந்நிலையில், இருவரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பேசிக்கொண்டிருந்த நிலையில், சுமத்ரா தான் தங்கியிருந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள ஏகேஎம் குடியிருப்பு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அதே நேரத்தில் யுவராஜிம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
இதுகுறித்து யுவராஜின் பெற்றோா், தா.பழூா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினா், யுவராஜின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.