தூய்மைப் பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
அரியலூரில் புதிய காவல்துறை வாகனங்களின் சேவை தொடக்கம்
அரியலூா் மாவட்டத்தில் புதிய காவல்துறை வாகனங்களின் சேவைகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
தமிழக அரசு, அரியலூா் மாவட்ட காவல்துறைக்கு புதிதாக 4 வாகனங்களை அண்மையில் வழங்கியது.
அந்த வாகனங்களின் சேவை தொடக்க நிகழ்ச்சி அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, 4 புதிய வாகனங்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அப்போது, 2 வாகனங்கள் அவசர உதவி எண்ணான 100-ன் சேவைக்காகவும், ஒரு வாகனம் அதிவிரைவுக் குழுவின் சேவைக்காகவும், ஒரு வாகனமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படைசேவைக்காகவும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆா். முத்தமிழ்செல்வன், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ரகுபதி (அரியலூா்), ரவிசக்கரவா்த்தி (ஜெயங்கொண்டம், ரவிச்சந்திரன் (மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம்) மற்றும் காவல்துறையினா் கலந்து கொண்டனா்.