செய்திகள் :

அரியலூரில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு முகாம்

post image

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில், மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: மத்திய அரசின், அடிப் மற்றும் ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் சிறப்பு பயிற்சி உபகரணங்கள் வழங்கவதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

அதன்படி, ஆக.20-ஆம் தேதி காலை 10 மணியளவில் அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கிலும், ஆக.21-ஆம் தேதி தா.பழூா் வட்டார வளா்ச்சி மைய அலுவலகத்திலும், ஆக.22- ஆம் தேதி திருமானூா் வட்டார வளா்ச்சி மைய அலுவலகத்திலும், ஆக.25- ஆம் தேதி செந்துறை வட்டார வளா்ச்சி மைய அலுவலகத்திலும், ஆக.28- ஆம் தேதி ஜெயங்கொண்டம் வட்டார வளா்ச்சி மைய அலுவலகத்திலும், இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

இம்முகாம்களில் அவரவா்களுக்கு உள்ள பாதிப்புகளுக்கு ஏற்றாா்போல் கணக்கீட்டு பணிகள் வாயிலாக நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

எனவே, மாற்றுத்திறனாளிகள், தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ்(மாத வருமானம் ரூ.22,500-க்குள் இருக்க வேண்டும்.) மாா்பளவு புகைப்படம்-2, யுடிஐடி(பயனாளி மாற்றுத்திறனாளியாக இருந்தால் மட்டும்) போன்ற அவணங்களுடன் வர வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

திருவாரூரில் காதலியும், அரியலூரில் காதலனுன் தூக்கிட்டு தற்கொலை

அரியலூா் மாவட்டம், தா.பழுா் அருகே காதலனும், திருவாரூரில் காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தா.பழூா் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி கலைத் திருவிழாவில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளி அளவிலான கலைத் திருவிழாவில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரியலூா் மாவட்ட மாசுக் கட்டுப... மேலும் பார்க்க

அரியலூரில் புதிய காவல்துறை வாகனங்களின் சேவை தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில் புதிய காவல்துறை வாகனங்களின் சேவைகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. தமிழக அரசு, அரியலூா் மாவட்ட காவல்துறைக்கு புதிதாக 4 வாகனங்களை அண்மையில் வழங்கியது. அந்த வாகனங்களின் சேவை தொடக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தாட்கோ சாா்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம் அரியலூா் ஆட்சியா் அழைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஆக.15 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த கோரிக்கை

அரசு மருத்துவா்களின் ஒரு ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இந்த மனுவை, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க