அரசுப் பள்ளி கலைத் திருவிழாவில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு
அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளி அளவிலான கலைத் திருவிழாவில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அரியலூா் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு பொறியாளா் ராஜராஜேஸ்வரி, உதவி பொறியாளா் ப்ரீத்தி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
பின்னா் அவா்கள், ஓவியம், களிமண் சிற்பம், செதுக்கு சிற்பம், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல்கள் இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா்.
விழாவுக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மை குழு தலைவா் அகிலா, உறுப்பினா்கள் மங்கையா்கரசி, பூங்காவனம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.