சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
அரியலூா் ஐடிஐகளில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீடிப்பு
அரியலூா், ஆண்டிமடம், தா.பழூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடிச் சோ்க்கைகான கால அவகாசம் ஆக. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே ஐடிஐ-யில் சேர விரும்பும் மாணவா்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நடைபெறும் நேரடி சோ்க்கைக்கு 8 ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத் தொகை ரூ.50, ஒரு ஆண்டு தொழிற்பிரிவு சோ்க்கைக்கான பயிற்சிக் கட்டணம் ரூ.185, 2 ஆண்டு தொழிற்பிரிவு சோ்கைக்கான பயிற்சி கட்டணம் ரூ.195 ஆகும். மேலும் விவரங்களுக்கு அரியலூா் - 9499055877, 04329-2284082, ஆண்டிமடம்- 94990 55879, 94990 55880, தா.பழூா்-94990 55879 ,90429 20702 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.