ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
அரியலூா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும் அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துத் தரக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் போதிய அளவு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், கழிவறை, சாலை உள்ளிட்ட வசதிகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தகவலறிந்து வந்த காவல் துறையினா், கோரிக்கைகள் சம்பந்தமாக துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் அவா்கள் கலைந்துச் சென்றனா்.