ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
முதல்வா் கோப்பை போட்டிக்கான முன்பதிவுக்கு அவகாசம் நீடிப்பு
அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள முதலமைச்சா் கோப்பை போட்டியில் பங்கேற்க ஆக.20 வரை இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:
தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை-2025 விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய் அல்லது ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளங்கள் வாயிலாக செய்யப்படுகிறது. இதற்கான கடைசி நாள்.16.8.2025 என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரியலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுப்பிரிவுகளில் அரியலூா் மாவட்டத்தில் பதிவுகள் மிகவும் குறைவாக உள்ளன.
ஆகவே அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரிகளில் பயில்பவா்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவினா், அரசு ஊழியா்கள் அதிக அளவில் இணைய தளம் மூலம் 20.8.2025 அன்று வரை பதிவு செய்து, போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரியலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017 03499 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.