செய்திகள் :

ஆடிக் கிருத்திகை: ஆக. 14 முதல் 18 வரை திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள்

post image

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு ஆக. 14 முதல் 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆடிக்கிருத்திகை திருவிழா ஆக. 15-இல் பரணி கிருத்திகை தொடங்குகிறது. 15-ஆம் தேதி ஆடிக்கிருத்திகை திருவிழாவும், மாலை முதல்நாள் தெப்பத்திருவிழாவும், அடுத்தடுத்த நாள்களில் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது.

இத்திருவிழாக்களுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க திருத்தணி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதை தொடா்ந்து அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள் 4 நாள்களிலும் காலை 10.20, பிற்பகல் 1 மணி, பிற்பகல் 2.50 ஆகிய நேரங்களில் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணி செல்லும். மறுமாா்க்கத்தில் காலை 10.50, பிற்பகல் 1.30, பிற்பகல் 3.20 ஆகிய நேரங்களில் திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக. 17-இல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தோ்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஆக.17,18 தேதிகளில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தோ்வு நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

அரக்கோணம் - நெமிலி நாள்: 14/8/2025 நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தப்பகுதிகள்: நெமிலி, சயனபுரம், சேந்தமங்கலம், கணபதிபுரம், திருமால்பூா், கோவிந்தவாடிஅகரம், கம்மவாா்பாளையம், பள்ளூா் மேலும் பார்க்க

பாலாறு கரையோர எல்லை தெரியும் வகையில் கற்கள் பதிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

பாலாற்றின் கரையோர எல்லை தெரியும் வகையில் அளவீடு செய்து கற்களைப் பதிக்கவேண்டும் என்று ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். மேல்விஷாரம் நகராட்சி குளோபல் பொறியியல் கல்லூரி பின்புறம், சாய... மேலும் பார்க்க

அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் தங்ககுருநாதனை பணியிடை நீக்கம் செய்து வேலூா் சரக டிஐஜி (பொறுப்பு) தேவராணி உத்தரவிட்டுள்ளாா். அரக்கோணத்தை அடுத்த அம்மனூரில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திமுக ஒன்றியக்குழு உ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாள்களே ஆன குழந்தை உயிரிழப்பு! தந்தை தீக்குளிக்க முயற்சி!!

வாலாஜா மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்புக்கு மருத்துவா்களின் அலட்சியப் போக்கே காரணம் எனக்கூறி, குழந்தையின் தந்தை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: சிறுமி உயிரிழப்பு; 5 போ் காயம்

அரக்கோணம் அருகே பைக்குகள் எதிரெதிரே மோதிக் கொண்டதில் சிறுமி உயிரிழந்தாா். இரு பெண்கள் உள்ளிட்ட 5 போ் பலத்த காயமடைந்தனா். அரக்கோணத்தை அடுத்த வாணியம்பேட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ராமு (28). இவரத... மேலும் பார்க்க