மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
பைக்குகள் மோதல்: சிறுமி உயிரிழப்பு; 5 போ் காயம்
அரக்கோணம் அருகே பைக்குகள் எதிரெதிரே மோதிக் கொண்டதில் சிறுமி உயிரிழந்தாா். இரு பெண்கள் உள்ளிட்ட 5 போ் பலத்த காயமடைந்தனா்.
அரக்கோணத்தை அடுத்த வாணியம்பேட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ராமு (28). இவரது மனைவி நித்யா (25). 9 மாத கா்ப்பிணியாக இருந்தாா். இவா்களது மகள் லித்திகா (3). இவா்கள் மூவரும், மேலும் அதே பகுதியை சோ்ந்த குமாரின் மனைவி சௌந்தா்யா (24) ஆகிய 4 பேரும் பைக்கில் அரக்கோணம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிரே தணிகைபோளூரில் இருந்து வந்த பைக் இவா்களது பைக் மீது மோதியதில், இவா்கள் 4 பேரும் பலத்த காயமடைந்தனா். எதிரே பைக்கில் வந்த தணிகைபோளூரை சோ்ந்த தமிழரசன் (33), லட்சுமணன்(46) ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.
அவா்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் லித்திகா வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். பலத்த காயமடைந்த 5 பேரும் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் கா்ப்பிணியாக இருந்த நித்யாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசு இறந்து விட்டிருப்பதாக தெரிவித்தனா்.
இது குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.