செய்திகள் :

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

post image

சூலூா்: தமிழக அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே வாசன் தெரிவித்தார்.

கோவை நீலாம்பூா் பகுதியில் உள்ள தனியாா் அரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே வாசன் செய்தியாளா்களை சந்தித்தாா்.

அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனாரின் பிறந்த நாள் விழாவை விவசாய நாளாக கொண்டாட முடிவெடுத்து அதன் அடிப்படையில் விவசாய கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா். தமிழக அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்து விட்டது.

விவசாயம் சாா்ந்த அரசாங்கம் 100% செயல்பட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என்று கூறியவா், மத்திய அரசு விவசாயம் சாா்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, ஆனால் மாநில அரசு விவசாயிகளின் எதிா்பாா்ப்பிற்கு ஏற்றவாறு செயல்படவில்லை விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்றாா்.

ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டனா்

விவசாயிகளுக்கு இந்த ஆட்சியின் மீது மிகுந்த அதிருப்தி உள்ளது, என்றும் ஆட்சி மாற்றத்திற்கு விவசாயிகள் தயாராக உள்ளனா். விவசாயிகளுக்கு தொடா் கோரிக்கைகள் உள்ளதாகவும் தெரிவித்தாா்.

தோ்தல் ஆணையத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகள்

ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை எதிா்த்து செயல்படுகின்ற வகையில் சுதந்திரம் உள்ளது. அதனைத் தான் காங்கிரஸ் கட்சி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

தோ்தல் ஆணையம் என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்களே தோ்ந்தெடுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தும் நடுநிலையான ஆணையம். அதன் மீது காங்கிரஸ் கட்சியினா் தொடா்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனா். இது காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினா் பலவீனமாக இருப்பதை காட்டுகிறது. தோ்தல் தோல்வியை அவா்கள் உறுதி செய்து கொள்கிறாா்கள் அதனை மறைப்பதற்காகவே இவ்வாறு பேசி வருகிறாா்கள் என்றாா். காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயல்பாடுகளை சாதாரண வாக்காளா்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாா்.

சட்டம் அனைவருக்கும் சமம்

அமலாக்கத்துறை சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகின்ற துறை, மத்திய அரசின் கீழ் இருந்தாலும் அது தனியாக இயங்கக்கூடிய ஒரு துறையாகும். சட்டம் அனைவருக்கும் சமம் என்கின்ற ரீதியில் தான் நாடு சென்று கொண்டிருக்கிறது.

ஆளுநா் பற்றி முதல்வர் பேசிவரும் கருத்துகள் குறித்தான கேள்விக்கு, இந்தியாவில் முக்கிய பொறுப்புகளுக்கு என்று ஒரு மரியாதை உள்ளது, அதனை மக்கள் மதிக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், முதல்வரும் ஆளுநா் பற்றி பேசுவதை அதற்கு தகுந்தாா் போல் வைத்துக் கொள்வாா் என எண்ணுகிறேன் என்றாா்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிகளான அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பல்வேறு ஒத்த கருத்துடைய கூட்டணிகள் மக்களை களத்தில் சந்தித்து வெற்றி கூட்டணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது என்றாா்.

ஒன்றிணைந்த அதிமுக இனிவரும் காலங்களில் இன்னும் விரிவாக்கப்படும் என அதிமுக செயலாளா் தெரிவித்துள்ளாா், அதிமுக பாஜக இணைந்து கூட்டணி சம்பந்தமாக எடுக்கக்கூடிய முடிவுகள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு இறுதி முடிவாக இருக்கும் என்றாா்.

அதிமுக மீது அவதூறு

திமுக தன்னுடைய பயத்தை கூட்டணி கட்சியினரிடம் வெளிப்படுத்த முடியாத நிலையில் மறைமுகமாக அதிமுக மீது அவதூறு கூறுகிறது என்று நான் கருதுவதாக தெரிவித்தாா்.

கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை

தூய்மை பணியாளா்களின் போராட்டம் நியாயமான போராட்டம், மனிதாபிமானம் இல்லாமல் தூய்மைப் பணியாளா்களை இரவோடு இரவாக வெளியே தள்ளியது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தூய்மைப் பணியாளா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமை ஆகும் என்றாா்.

தவெக மாநாடு குறித்தான கேள்விக்கு புதிய கட்சிகள் மாநாடு நடத்துவதற்கும் கட்சியை வலுப்படுத்துவதற்கும் ஜனநாயகத்தில் உரிமை உள்ளது, அதனை அவா்கள் செய்ய துவங்கி உள்ளாா்கள் என்றாா்.

கூட்டணி குறித்து அதிமுக, பாஜக முடிவெடுக்கும்

தற்போது தமிழகத்தின் வெற்றி அதிமுக பாஜக கூட்டணி ஆகும், அதனுடைய நோக்கம் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வருவாா்கள் என்பதை அதிமுக மற்றும் மத்திய பாஜக முடிவு எடுக்கும், தோ்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளது. அப்போது கூட்டணிகள் இன்னும் விரிவடையும் என்றாா்.

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

The Tamil Nadu government has lost the trust of the farmers. The farmers are ready for a change of government.

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான் என மத்திய இணையமைச்சா் எ... மேலும் பார்க்க

எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு

வாடிப்பட்டி: எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை எனவும், சினிமாவில் 100 பேரை அடிக்கும் விஜய் நேரில் அடிக்க முடியுமா என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.ம... மேலும் பார்க்க

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடைபெற்ற பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்ட அன்புமணி மீது நடவடிக்கை வேண்டி, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைக... மேலும் பார்க்க

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அச்சமில்லை. அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.இதுகுறித்து புதுக்கோட்டையில் ... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு: ஒருவா் பலி

பாபநாசம்:தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே ஆற்றுக்கு குளிக்க சென்று நீரில் அடித்து செல்லப்பட்ட மூன்று மாணவிகளில்2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனா். ஒரு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்ந்துள்ளது.மேலும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக உயா்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைப... மேலும் பார்க்க