செய்திகள் :

எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ‘ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார்!' -கார்கே

post image

பி. சுதர்ஷன் ரெட்டி ‘இந்தியாவின் ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார்!' இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி இன்று(ஆக. 19) தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரைக் குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருப்பதாவது:

‘குடியரசு துணைத் தலைவர் போட்டியானது ஒரு கொள்கை சித்தாந்த ரீதியிலான போராட்டம்.

இந்தநிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் பி. சுதர்ஷன் ரெட்டியை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான ஒருமித்த வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளோம்.

பி. சுதர்ஷன் ரெட்டி இந்தியாவின் முற்போக்கான மதிப்பிற்குரிய நீதிமான்களில் ஒருவராவார். சட்டத்துறையில் நெடுங்காலம் திறம்பட பயணித்த அனுபவத்தைக் கொண்டவர். அவரது பணிக்காலத்தில் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி; குவஹாட்டி(அஸ்ஸாம்) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ; உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிய பொறுப்புகளை வகித்தவர். சமூக, பொருளாதார, அரசியல் நீதிக்காக தொடர்ந்து போராடும் துணிச்சலான சாதனையாளர்.

நமது நாட்டின் விடுதலை இயக்கத்தை வடிவமைத்த மாண்புகளை, எவற்றின் மீது நமது தேசத்தின் அரசமைப்பும் ஜனநாயகமும் நங்கூரமிட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, அந்த மாண்புகளை முழுமையாக அவர் பிரபலிப்பார்.

இந்த மாண்புகள் அனைத்தும் அச்சுறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நமது ஒருங்கிணைந்த தீர்க்கமான முடிவால் இந்தத் தேர்தலில் போராட வேண்டும்.’ இவ்வாறு மல்லிகார்ஜுன் கார்கே தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மசோதாக்கள் மீது ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியிருக்கிறோம்: உச்சநீதிமன்றம்

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியிருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளார். மேலும் ஆளுநர் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மறு ஆய்வு செய்யவில்லை, குடி... மேலும் பார்க்க

மும்பை உயர்நீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மூன்று வழக்குரைஞர்கள் இன்று பதவியேற்றனர். தலைமை நீதிபதி அலோக் ஆராதே, நீதிபதிகள் அஜித் கடேதங்கர், சுஷில் கோடேஸ்வர் மற்றும் ஆர்த்தி சாத்தே ஆகியோருக்கு பதவி... மேலும் பார்க்க

கடும் பனிமூட்டம்.. கிராமத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

மகாராஷ்டிரத்தில், கடுமையான பனிமூட்டம் மற்றும் கனமழையால், தனியார் ஹெலிகாப்டர் அவசரமாக சாலையோரத்தில் தரையிறக்கப்பட்டது. புணே மாவட்டத்தில், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை வேட்பு மனு தாக்கல்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகித்துவந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தோ்வு செய்யப்பட்ட நிலையில், அவர், நாளை(ஆக. 20) வேட்பு மனு தாக்கல் ச... மேலும் பார்க்க

நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு சந்திப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசியுள்ளார்.தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளையும் நாளை மறுநாளும்(ஆக. 20, 21) நடைபெறவிருக்கிறது. இதி... மேலும் பார்க்க

ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

சிறுமி வன்கொடுமை வழக்கில் மதபோதகர் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீனை மீண்டும் நீட்டித்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த மத போதகர் ஆசாராம் பாபு (83). இ... மேலும் பார்க்க