'அதிகமா உதவறவுங்க 'அங்க'தான் இருக்காங்க'- டிரை சைக்கிளில் இந்தியப் பயணம் செய்த ய...
கடும் பனிமூட்டம்.. கிராமத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்!
மகாராஷ்டிரத்தில், கடுமையான பனிமூட்டம் மற்றும் கனமழையால், தனியார் ஹெலிகாப்டர் அவசரமாக சாலையோரத்தில் தரையிறக்கப்பட்டது.
புணே மாவட்டத்தில், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று 2 விமானிகள் உள்பட 6 பயணிகளுடன் இன்று (ஆக.19) வானில் பறந்துக் கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடுமையான பனிமூட்டம் மற்றும் கனமழையால், மாலை 3 மணியளவில் அந்த ஹெலிகாப்டர் சால்டார் எனும் கிராமத்தின் அருகில் திறந்தவெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில், யாருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், தரையிறங்கிய 15 நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர் மீண்டும் பறந்து அதன் பயணத்தைத் தொடர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
தகவலறிந்து, அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள் ஹெலிகாப்டரை தங்களது செல்போனில் படம்பிடித்தனர். இதுகுறித்த, விடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முன்னதாக, மகாராஷ்டிரத்தில் பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தின் ஏராளமான மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை வேட்பு மனு தாக்கல்!