பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிக் கொண்டாட்டம்! ஒன்றுகூடிய நடிகர்கள்!
பாக்கியலட்சுமி தொடரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக அத்தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடரின் வெற்றி பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் 2020 ஜூலை முதல் 2025 ஆகஸ்ட் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் நாயகியாக கே.எஸ். சுசித்ராவும், ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்தனர். நாயகனாக சதீஷ் குமார் நடித்திருந்தார்.
இவர்கள் மட்டுமின்றி, துணை கதாபாத்திரங்களான நேஹா மேனன், விஜே விஷால், ரித்திகா தமிழ்ச்செல்வி, திவ்யா கணேஷ், ரஞ்சித், மீனா செல்லமுத்து, விகாஷ் சம்பத், ராஜலட்சுமி உள்ளிட்ட பலரின் நடிப்பும் பாக்கியலட்சுமி தொடருக்கு பக்க பலமாக அமைந்தது.
வேறு பெண்ணுடன் உறவு கொண்டு, கணவரால் கைவிடப்பட்ட பெண், தனியொரு நபராக வாழ்வில் சாதித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறுவதே பாக்கியலட்சுமி தொடரிக் மையக்கரு.
இதில், நல்ல கணவராக இல்லாவிட்டாலும், நல்ல தகப்பனாக இருக்கப் போராடும் சதீஷ் (கோபி), ஒருகட்டத்திற்கு பிறகு அம்மாவை கவனித்துக்கொள்ளும் பிள்ளைகள் என திரைக்கதை மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் நெருக்கமாகவும் அமைக்கப்பட்டது.
ஒருசில எபிஸோடுகள் சலிப்பை ஏற்படுத்துவதைப் போன்று இருந்தாலும், தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி தொடர் சாதனை படைத்துள்ளது.
இதனைக் கொண்டாடும் வகையில், சிறப்பு நிகழ்ச்சிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. பாக்கியலட்சுமி வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் நடந்த அந்த நிகழ்ச்சியில், அத்தொடரில் நடித்த அனைத்து நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இதையும் படிக்க |ஆட்சேபனைக்குரிய காட்சிகள்: மனுஷி படத்தை பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு!