செய்திகள் :

கஜகஸ்தான் ராணுவத்தில் புதியதாக செய்யறிவு பிரிவு உருவாக்கம்!

post image

கஜகஸ்தான் ராணுவப் படைகளை நவீனமாக்க, புதியதாகச் சிறப்பு செயற்கை நுண்ணரிவு பிரிவு உருவாக்கப்படுவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கஜகஸ்தான் ராணுவத்தின் ஆயுதப் படைகளின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுப்படுத்துவதற்காக, ஒரு சிறப்பு செயற்கை நுண்ணரிவு (ஏஐ) பிரிவை, அந்நாட்டு அரசு உருவாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கஜகஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம், நேற்று (ஆக.18) வெளியிட்ட அறிக்கையில், போர் சூழ்நிலைகளில் பெரிய தரவு பகுப்பாய்வு, தானியங்கி கட்டளை அமைப்புகள், செயல்பாட்டு மாடலிங் மற்றும் நிகழ்நேர முடிவெடுப்பதற்கான செய்யறிவு தீர்வுகளை இந்தப் புதிய பிரிவு உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:

“கஜகஸ்தான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியின் அறிவுறுத்தல்களின்படி, செய்யறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கி செயல்படுத்துவதற்காகத் தனி பிரிவு ஒன்று நிறுவப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு ஆய்வு மையங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பாதுகாப்பு அமைப்புகளினுள் ஒருங்கிணைக்கச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கஜகஸ்தான் பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சர் தார்கன் அக்மெதியேவ், அந்நாட்டின் அபாய் மற்றும் அயாகோஸ் ராணுவத் தளங்களை நேரில் ஆய்வு செய்தார்.

இதையும் படிக்க: பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?

Kazakhstan's Defense Ministry has announced that a new specialized artificial intelligence unit is being created to modernize its military forces.

பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?

கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்தை பத்திரமாக விமானிகள் தரையிறக்கினர்.கிரீஸ் நாட்டின் கோர்ஃபு விமான நிலையத்தி... மேலும் பார்க்க

ரஷிய எண்ணெய் கொள்முதல் போருக்கான நிதியுதவி..! இந்தியா மீது டிரம்ப் ஆலோசகர் தாக்கு!

ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வது, உக்ரைன் மீது நடத்தப்படும் போருக்கான நிதியுதவி என இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.இந்த... மேலும் பார்க்க

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.ரஷியா - உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியி... மேலும் பார்க்க

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இருவரும் விரைவில் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இடையேயான பேச்சுவ... மேலும் பார்க்க

62 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

இலங்கை: தமிழா் பகுதிகளில் கடை அடைப்பு

இலங்கையில் தமிழா்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாண பகுதிகளில் ராணுவக் குவிப்பு மற்றும் ராணுவ வீரா்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடை அடைப்புப் போராட்டம் திங்கள... மேலும் பார்க்க