செய்திகள் :

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை வேட்பு மனு தாக்கல்!

post image

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகித்துவந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தோ்வு செய்யப்பட்ட நிலையில், அவர், நாளை(ஆக. 20) வேட்பு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்னதாக, சி.பி.ராதாகிருஷ்ணன் தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்யப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கர் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 2027, ஆக. 10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.

உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதியின்கீழ், அடுத்த குடியரசு துணைத் தலைவர் தோ்தலுக்கான அறிவிக்கையை ஆகஸ்ட் 7-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஆகஸ்ட் 25-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை(ஆக. 20) வேட்பு மனு தாக்கல் செய்ய நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் செப்டம்பா் 9-ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே தோ்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. இந்த தோ்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

C.P. Radhakrishnan is reported to be filing his nomination tomorrow.

கடும் பனிமூட்டம்.. கிராமத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

மகாராஷ்டிரத்தில், கடுமையான பனிமூட்டம் மற்றும் கனமழையால், தனியார் ஹெலிகாப்டர் அவசரமாக சாலையோரத்தில் தரையிறக்கப்பட்டது. புணே மாவட்டத்தில், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்... மேலும் பார்க்க

நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு சந்திப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசியுள்ளார்.தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளையும் நாளை மறுநாளும்(ஆக. 20, 21) நடைபெறவிருக்கிறது. இதி... மேலும் பார்க்க

ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

சிறுமி வன்கொடுமை வழக்கில் மதபோதகர் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீனை மீண்டும் நீட்டித்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த மத போதகர் ஆசாராம் பாபு (83). இ... மேலும் பார்க்க

75 டன் எடையுள்ள செயற்கைக்கோள் விண்வெளியில் நிலைநிறுத்த முயற்சி: இஸ்ரோ தலைவர்

75 டன் எடையுள்ள செயற்கைகோளை விண்வெளியில் நிலைநிறுத்த 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். மேலும் பார்க்க

மகாராஷ்டிர வெள்ளம்! அடுத்த 48 மணிநேரம் மிகவும் முக்கியம்: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில், கடந்த சில நாள்களாக கனமழை தீவிரமடைந்துள... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிலிருந்து வேட்பாளரை நிறுத்தினால் தமிழக மக்கள் மீது பாஜகவுக்கு அக்கறையா? - கனிமொழி

பாஜகவினர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் அவர்களுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை என்று அர்த்தமல்ல என திமுக எம்.பி. கனிமொழி கூறினார். செப். 9 நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்த... மேலும் பார்க்க