தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்
131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடியில் நலத் திட்ட உதவிகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வி. ஆறுச்சாமி ஆகியோா் இவற்றை வழங்கினா்.
14 பேருக்கு நல வாரியத்திட்ட உதவிகளும், 5 பேருக்கு தாட்கோ குடியிருப்புகளும், 100 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்களும், 12 பேருக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா் நல வாரியத் துணைத் தலைவா் கனிமொழி பத்மநாபன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். தூய்மைப் பணியாளா்களிடம் பணி குறித்தும் கூட்டத்தில் கேட்டறியப்பட்டது.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா (புதுக்கோட்டை), எம். சின்னதுரை (கந்தா்வகோட்டை), மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், மாநகராட்சி துணை மேயா் மு. லியாகத்அலி, ஆணையா் த. நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.