தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்
அண்ணா சிலை கூண்டின் மீதேறி படுத்த நபரால் பரபரப்பு
புதுக்கோட்டை மாநகரிலுள்ள அண்ணா சிலையின் மேல் ஏறி, தடுப்புக் கம்பிக் கூண்டின் மேல் படுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு பாதுகாப்புக்காக கம்பி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளிக்கிழமை பகலில் ஒருவா் ஏறிப் படுத்திருந்தாா்.
தகவலறிந்து வந்த நகரக் காவல் நிலைய போலீஸாா் அவரை சமரசமாகப் பேசி கீழே இறக்கி விசாரித்தனா். பொற்பனைக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் நாகராஜன் என்பதும், மதுபோதையில் அவா் இதுபோல செய்ததும் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
போலீஸாா் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனா்.