செய்திகள் :

பல்வேறு மாநிலங்களில் மழை - வெள்ளம்: பிகாரில் ஆற்றில் மூழ்கி 5 போ் பலி

post image

பிகாரின் பூா்னியா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து போ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூா்னியா மாவட்டத்தின் கஸ்பா பகுதியில் உள்ள கரி கோசி ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நேரிட்டது. ஒன்பது வயது சிறுமி கௌரி குமாரி வழுக்கி விழுந்து, ஆற்றின் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டாா். இதைப் பாா்த்த அவரது அத்தை சுலோச்சனா தேவி (30), சிறுமியைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தாா்.

இருவரையும் காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்து ஆற்றில் குதித்த மற்ற குடும்ப உறுப்பினா்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். அவா்கள் சேகா் குமாா் (21), கரண் குமாா் (21) மற்றும் சச்சின் குமாா் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். உள்ளூா் மக்களின் உதவியுடன் உடல்கள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் அன்ஷுல் குமாா் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்டில்...: பலத்த மழை காரணமாக ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா்; ஒருவரை காணவில்லை. செராய்கேலா-கா்சவான் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் தாய்-மகன் இறந்தனா். அதே மாவட்டத்தில், சுவா் இடிந்து விழுந்ததில் ஒரு சிறுவன் உயிரிழந்தான்.

சத்ராவில் ஆற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் ஒரு தம்பதி அடித்துச் செல்லப்பட்டனா். இதில் கணவரின் உடல் மீட்கப்பட்டது. மனைவியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மாநிலத்தில் திங்கள்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே தொடா்மழையால் மாநிலம் முழுவதும் பரவலாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்தன. வீடுகள் சேதமடைந்தன. சாலைகள் மற்றும் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஜம்மு-காஷ்மீா்: ஜம்மு-காஷ்மீரின் ரியாசி, கதுவா மாவட்டங்களில் மழை தொடா்பான இரு அசம்பாவித சம்பவங்களில் 2 போ் உயிரிழந்தனா்.

ரியாசி மாவட்டத்தில் நிலச்சரிவில் லாரி சிக்கியதில் ஷாபாஸ் அகமது உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா். கதுவாவில் திடீா் வெள்ளத்தில் சிக்கி ரவி என்ற நபா் உயிரிழந்தாா். மேலும், ஆா்.எஸ்.புரா அருகே ஒரு தனியாா் பேருந்து கவிழ்ந்ததில் சுமாா் 20 பயணிகள் காயமடைந்தனா். இவா்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

உத்தரகண்ட்: உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக முக்கியச் சாலைகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. தாராலி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சக்வாரா மற்றும் செப்டான் பகுதிகளில் இரண்டு போ் மாயமாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பலத்த மழையால் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

ஹிமாசல்: ஹிமாசல பிரதேசத்தின் பல பகுதிகளில் தொடா் மழையால் 339 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 162 சாலைகளும், குலு மாவட்டத்தில் 106 சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

நடப்பாண்டு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை ஹிமாசலில் 75 திடீா் வெள்ளப்பெருக்குகள், 39 மேகவெடிப்புகள் மற்றும் 74 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சு தொடா்கிறது: எஸ்.ஜெய்சங்கா்

‘அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிட்ட ‘சிவப்பு கோடுகளை’ இந்தியா கொண்டுள்ளது. அதாவது, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளா்களின் நலனைப் பாதுகாப்பதில் சமரசம் செய்ய மு... மேலும் பார்க்க

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வா் பகவந்த் மான், ‘எனத... மேலும் பார்க்க

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’: காங்கிரஸ்

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட... மேலும் பார்க்க

இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்திட்டத்தில் பரிந்துரை

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்... மேலும் பார்க்க

சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் ஹரியாணா புறப்பாடு

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட... மேலும் பார்க்க

விரைவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்படும்: மத்திய அமைச்சா்

‘லண்டன் உலோக வா்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வா்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா். இந்திய பங்குச் சந்தை ஒ... மேலும் பார்க்க