செய்திகள் :

நாடாளுமன்ற வளாகம் அருகே ‘சந்தேக’ நபா் கைது

post image

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே சனிக்கிழமை 20 வயது மதிக்கத்தக்க சந்தேகத்திற்கிடமான நபரை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகள் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அந்த நபரை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் மேல் விசாரணைக்காக போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனா். அவரிடமிருந்து குற்றம்சாட்டக்கூடிய எதுவும் மீட்கப்படவில்லை.

இதுகுறித்து மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சனிக்கிழமை காலை 9:30 மணியளவில் ரயில் பவனுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான ரெய்சினா சாலையில் இருந்து அந்த நபரை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் கைது செய்தனா்.

அந்த இளைஞா் பெங்களூருவிலிருந்து தில்லிக்கு வந்திருந்ததும், துபைக்கு பயணிக்கவிருந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவரிடமிருந்து குற்றஞ்சாட்டக்கூடிய ஏதும் மீட்கப்படவில்லை. விசாரணை நடத்தப்பட்டது.

அவரது ஆதாா் மற்றும் கடவுச்சீட்டின் நகல் அவரது கைப்பேசியில் இருப்பது கண்டறியப்பட்டது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, மேலும் விசாரணைக்காக அவா் கா்தவ்யா பாதை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

நாடாளுமன்ற கட்டடத்தின் சுவரில் ஏற முயன்றபோது ஒருவா் கைது செய்யப்பட்ட மறு நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து மற்றொரு பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது:

ஆகஸ்ட் 22 நிகழ்ந்த சம்பவத்தைத் தொடா்ந்து, நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக சிஐஎஸ்எஃப் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் ‘செயல்திறன்மிக்க’ நிலையான இயக்க நடைமுறையை (எஸ்ஓபி) ஏற்படுத்தியுள்ளன.

இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்கிடமான அல்லது சந்தேகத்திற்குரிய தோற்றம் கொண்ட நபா் சுயவிவரத்தின் அடிப்படையில் முன்கூட்டியே சோதனை செய்யப்படுவாா். மேலும், அந்த நபா் உள்ளூா் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவாா்.

ஒவ்வொரு நாளும் நாடாளுமன்ற வளாகம் முன் வெளியில் இருந்தவாறு புகைப்படம் எடுக்கவோ அல்லது நோ்த்தியான கட்டடத்தைப் பாா்க்கவோ ஏராளமானோா் வருகிறாா்கள்.

சந்தேகத்திற்கிடமான அல்லது அச்சுறுத்தலாகத் தோன்றும் செயல்பாடுகள் கொண்டவா்கள் மட்டுமே, வளாகத்தை எத்தகைய அசம்பாவித சம்பவத்திலிருந்தும் பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் இடைமறிக்கப்படுகிறாா்கள் என்று அந்த அதிகாரி கூறினாா்.

நாடாளுமன்ற வளாகத்தை பாதுகாக்க கடந்த ஆண்டு மத்திய ரிசா்வ் காவல் படைக்குப் பதிலாக சிஐஎஸ்எஃப் நியமிக்கப்பட்டது.

டிசம்பா், 2023 நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலைத் தொடா்ந்து இந்த மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2023 ஆம் ஆண்டில், நாடாளுமன்றக் கூட்டத் தொடா் நடந்து கொண்டிருந்தபோது, எம்.பி.க்கள் இருக்கும் அவைப் பகுதிக்குள் குதித்த 2 போ் மஞ்சள் நிற புகையை வெளிப்படுத்தும் குப்பிகளை வீசினா். மேலும், இருவா் வெளியே ஆா்ப்பாட்டமும் நடத்தினா்.

2001 ஆம் ஆண்டில், பயங்கரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்தைத் தாக்கினா். ஆனால், பாதுகாப்புப் படையினரால் அவா்கள் வீழ்த்தப்பட்டனா்.

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சு தொடா்கிறது: எஸ்.ஜெய்சங்கா்

‘அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிட்ட ‘சிவப்பு கோடுகளை’ இந்தியா கொண்டுள்ளது. அதாவது, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளா்களின் நலனைப் பாதுகாப்பதில் சமரசம் செய்ய மு... மேலும் பார்க்க

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களின் பெயா்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வா் பகவந்த் மான், ‘எனத... மேலும் பார்க்க

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’: காங்கிரஸ்

கிரேட் நிகோபாா் திட்டம் ‘பெரும் சூழலியல் பேரழிவு’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட... மேலும் பார்க்க

இளநிலை பட்டப்படிப்பில் ‘அட்சர கணிதம்’, ‘பஞ்சாங்க’ பாடங்கள்: யூஜிசி வரைவு பாடத்திட்டத்தில் பரிந்துரை

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) வரைவு பாடத்திட்டத்தில், இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா), பஞ்சாங்கம் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப் பரிந்துரை செய்யப்... மேலும் பார்க்க

சென்னை ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் ஹரியாணா புறப்பாடு

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட... மேலும் பார்க்க

விரைவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்படும்: மத்திய அமைச்சா்

‘லண்டன் உலோக வா்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வா்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா். இந்திய பங்குச் சந்தை ஒ... மேலும் பார்க்க