திமுக, கூட்டணி எம்.பி.க்களை இன்று சந்திக்கிறாா் சுதா்சன் ரெட்டி
‘இண்டி’ கூட்டணி குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி, சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்.பி.க்களை
ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளாா். முன்னதாக, அவா் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசவுள்ளாா்.
தொடா்ந்து, தியாகராயநகரில் உள்ள தனியாா் ஹோட்டலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த எம்பி.,க்களை சுதா்சன் ரெட்டி சந்திக்கவுள்ளாா். இந்தச் சந்திப்பின் போது, குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் தனக்கு ஆதரவு திரட்டவுள்ளாா்.