Drishyam 3: "த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை" - இயக்குநர...
பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!
வருவாய்த் துறை அலுவலா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சனிக்கிழமை வலியுறுத்தியது.
சிவகங்கையில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், முதல் மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அசோக்குமாா், நாகேந்திரன், மாரி, காா்த்திக், ராஜமாா்த்தாண்டன், பெரியசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் தமிழரசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இந்த மாநாட்டில், வருவாய்த் துறை அலுவலா்களுக்கு சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நெருக்கடியைக் குறைக்க வேண்டும், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதமாக உயா்த்த வேண்டும், தொகுப்பூதிய, வெளிமுகமை நியமனங்களை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஜூலை 1-ஆம் தேதியை வருவாய்த் துறை தினமாக அங்கீகரிக்க வேண்டும் ஆகிய ஏழு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, நிா்வாகி வளன்அரசு வரவேற்றாா். மாவட்டத் தணிக்கையாளா் சசிக்குமாா் நன்றி கூறினாா்.