Doctor Vikatan: 3 மாத கர்ப்பம்; இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் வலி, அபார்ஷன் அ...
காந்திகிராம பல்கலை.யில் ஓணம் கொண்டாட்டம்
காந்திகிராம கிராமியப் பல்கலை.யில், கேரள மாணவா்கள் சாா்பில் ஓணம் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைவேந்தா் ந.பஞ்சநதம் தலைமை வகித்தாா். அப்போது, கேரள மாநிலத்தின் பாரம்பரியம், ஓணம் திருவிழாவின் முக்கியத்துவம் குறித்து அவா் எடுத்துரைத்தாா். இதைத் தொடா்ந்து, பல்கலை.யில் பயிலும் கேரள மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினா்.
இதையொட்டி, பல்கலை. வளாகத்தில் பல்வேறு இடங்களில் அத்தப்பூ கோலம் வரையப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பல்கலை. பதிவாளா் (பொ) சுந்தரமாரி, கேரள மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோபகுமாா், பேராசிரியா்கள் மகாலிங்கம், கேசவராஜராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.