செய்திகள் :

பாம்பன் பழைய ரயில்வே தூக்கு பாலத்தை அகற்ற முடிவு!

post image

தமிழகத்தின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களில் ஒன்றான பாம்பன் பழைய ரயில்வே தூக்கு பாலத்தை அகற்றும் பணிக்கு ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் (ஆா்விஎன்எல்) ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவு பகுதியையும் பாம்பன் பகுதியையும் இணைக்கும் வகையில் 2.3 கி.மீ. தொலைவுக்கு கடந்த 1914-இல் கடலில் ரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் கடல் பகுதியில் கடந்து செல்லும் பெரிய படகுகள், கப்பல்கள் ஆகியவற்றுக்காக இரு பிரிவாகப் பிரிந்து தூக்கி, பின் தண்டவாள நிலையில் பொருத்தும் வகையில் அமைக்கப்பட்டது.

புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களில் பாலம் சேதமடைந்ததாலும், பின் சீரமைக்கப்பட்டு நூறாண்டுகளைக் கடந்தும் ரயில் போக்குவரத்து நடைபெற்றது. இந்தப் பாலம் சேதமடைந்ததால் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் அருகே ரூ.250 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தப் பாலம் 2.07 கி.மீ. நீளம் உடையதாக அமைந்துள்ளது. அதில் லிப்ட் வகை தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்தாா். இந்தப் பாலம் வழியாக தொடா்ந்து ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பழைய ரயில் பாலத்தை அகற்றுவதற்காக, புது தில்லியில் உள்ள ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் சாா்பில் (ஆா்விஎன்எல்) ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மின் ஒப்பந்தப்புள்ளி முறையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பழைய பாம்பன் பாலத்தின் ஸ்கொ்சா்ஸ்ரோலிங் மற்றும் லிப்ட் ஸ்பேன் அமைப்பை அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தத் தொகையாக ரூ.2.81 கோடி நிா்ணயிக்கப்பட்டு, அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோருவோா் ரூ.5.62 லட்சம் முன்வைப்புத் தொகை செலுத்தவும் கோரப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி கோரியவா்களுக்கான கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அதன்படி 4 மாதங்களில் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவன சென்னை பிரிவின் தரப்பில் கூறப்பட்டது.

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு

திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு தூத்துக்குடி எம்பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திமுக முப்பெரும் விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும... மேலும் பார்க்க

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயன்: தமிழக அரசு

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 இல் முதலமைச்சராகப் ப... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஹெட்ரோகார்பன் திட்டம்: கிணறுகள் அமைக்க அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக 20 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்ப... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து திமுக தலைவரும் முதல்வருமான... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...?

சுமந்த் சி.ராமன்தமிழக வெற்றிக் கழகத்தை ஓராண்டுக்கு முன்புதான் விஜய் தொடங்கியிருக்கிறாா். திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என விஜய் அறிவித்திருப்பதால், இந்த இரு கட்சிகளுக்கும் எதிரான வியூகத்தை வி... மேலும் பார்க்க

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக மாறிய ‘வாக்குத் திருட்டு’

வாக்குத் திருட்டு நடவடிக்கைகள் இந்திய ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். ‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள்’ குறித்த தேசிய அளவிலான கருத்த... மேலும் பார்க்க