மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!
Ravi Mohan: ``ஹா ஹா ஹாசினி!'' - மேடையில் `சந்தோஷ் சுப்ரமணியம்' காட்சியை நடித்துக் காட்டிய ஜெனிலியா
நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார்.
'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தது.
'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வுக்கு நடிகை ஜெனிலியா தனது கணவர் ரித்தீஷுடன் வந்திருக்கிறார். மேடையில் 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தின் வசனங்களை ஜெனிலியாவும், ரவி மோகனும் பேசி ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளினார்கள்
நடிகை ஜெனிலியா பேசும்போது, "எனக்கு தமிழ் ஆடியன்ஸை ரொம்பவே பிடிக்கும். எனக்கு திருமணமாகி குழந்தைகள் வந்துவிட்டன. நானும் அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காகச் சென்றுவிட்டேன்.
நான் சமீபத்தில் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. ஆனால், இங்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
நானும் ரவியும் 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது மோகன் ராஜாவின் மாணவர்களைப் போலதான் நாங்கள் இருவரும் இருப்போம்.

மோகன் ராஜா என்ன சொல்கிறார்? எதற்காகக் கோபப்படுகிறார் என்ற காரணம்கூடத் தெரியாதவர்களாகத்தான் இருந்தோம்.
அந்த இடத்தில் இருந்து இங்கு அவர் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் தருணம் வரை இத்தனை வருடங்களாக நான் அவரைக் கவனித்திருக்கிறேன்.
அவர் மேலும் வளர்வதற்கு நான் வாழ்த்துகிறேன். அவர் தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் பலரும் பயனடையப் போகிறார்கள். நானும் அவருடைய சகோதரரினால் பயனடைந்தேன்." எனப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...