நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!
கெனிஷா கடவுள் கொடுத்த வரம்: ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தன் தோழி கெனிஷா குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
நிகழ்வில், ரவி மோகனின் தோழி கெனிஷா, நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ரவி மோகனும், கெனிஷாவும் இன்று சென்னை வருவதற்கு முன் தயாரிப்பு நிறுவனம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இருவரும் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் நிகழ்வில் பேசிய ரவி மோகன், “இந்த நிகழ்வு நடக்க ஒரே காரணம் கெனிஷாதான். இவ்வளவு பேர் வருவார்கள் எனத் தெரியாது. நான் யாரென எனக்கு உணர வைத்தவர். எனக்குக் கடவுள் கொடுத்த வரம் கெனிஷா. இவரைப் போன்ற ஒருவர் அனைவரின் வாழ்விலும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.” எனக் கூறினார்.
ரவி மோகன் துவங்கிய தயாரிப்பு நிறுவனத்தில் கெனிஷாவும் பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கடவுளை முட்டாளாக்க முடியாது! ரவி மோகனைச் சாடும் ஆர்த்தி?