செய்திகள் :

பெனால்டியை தவறவிட்ட யுனைடெட் வீரர்: மோசமான சாதனையிலும் பங்கேற்பு!

post image

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் தவறவிட்ட பெனால்டியால் அந்த வெற்றி பெறாமல் போட்டி சமனில் முடிந்தது.

இதற்காக அந்த அணியின் சொந்த ரசிகர்களாலே அவர் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் புகழ்பெற்ற அணியாக இருப்பது மான்செஸ்டர் யுனைடெட் அணி. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியும் இவர்களைச் சந்தித்து பேசினார்கள்.

சமீப காலமாக மான்செஸ்டர் யுனைடெட் அணி மோசமாக விளையாடி வருகிறது.

இந்த சீசனில் பிரிமீயர் லீக்கின் யுனைடெட் அதன் 2-ஆவது போட்டியில் ஃபுல்கம் அணியுடன் மோதியது.

Manchester United's Bruno Fernandes misses a penalty during the English Premier League.
பெனால்டியை தவறவிட்ட ப்ரூனோ ஃபெர்னான்டஸ்.

இதில் 38-ஆவது நிமிஷத்தில் யுனைடெட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

ப்ரூனோ ஃபெர்னான்டஸ் அதை இடதுபுறம் வலைக்கு பக்கத்தில் மேலே அடித்து வீணடித்தார். பின்னர், இறுதியில் போட்டி 1-1 என சமனில் முடிந்தது.

இதற்காக பலரும் இவரை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். புள்ளிப் பட்டியலில் யுனைடெட் 16-ஆவது இடத்தில் இருக்கிறது.

பிரீமியர் லீக்கில் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் களமிறங்கியது முதல் இதுவரை அதிகமான பெனால்டியை (5) தவறவிட்ட வீரராக அவர் மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

The match ended in a draw without a win due to a missed penalty by Manchester United player Bruno Fernandes.

16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர்!

லிவர்பூல் கால்பந்து அணி வீரர் 16 வயதிலேயே கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். பிரீமியர் லீக்கில் குறைந்த வயதில் கோல் அடித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் ... மேலும் பார்க்க

பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராகிறார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை?

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 விரைவில் தொடங்கவுள்ளது. அக்டோபர் மாத முதல் வாரத்தில் பிக் பாஸ் சீசன் 9 திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பிரமாண்ட தொடக்கத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருக... மேலும் பார்க்க

ஹாட்ரிக் வெற்றியைக் கொடுப்பாரா மோகன்லால்? ஹிருதயப்பூர்வம் டிரைலர்!

மோகன்லால் நடிப்பில் உருவான ஹிருதயப்பூர்வம் திரைப்படம் ஓணம் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது... மேலும் பார்க்க

ஓராண்டை நிறைவு செய்த மூன்று முடிச்சு தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மூன்று முடிச்சு தொடர், 300 நாள்களை நிறைவு செய்துள்ளது. ஓராண்டு வெற்றியைக் குறிப்பதால், குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்... மேலும் பார்க்க

சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயகுமார் நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் நடிக்கவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிறபகல் 2 மணிக்கு இதயம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்த... மேலும் பார்க்க

கெனிஷா கடவுள் கொடுத்த வரம்: ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் தன் தோழி கெனிஷா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைப... மேலும் பார்க்க