செய்திகள் :

இலங்கை முன்னாள் அதிபர் விக்ரமசிங்கவுக்கு ஜாமின்!

post image

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஆக.22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கடந்த 2023-ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள, அரசு நிதியில் இருந்து ரூ.1.7 கோடி பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவர் ஆக.26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளினால் அவர் சிறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், அங்கிருந்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தவாறே விடியோ அழைப்பு வாயிலாக இன்று (ஆக.26) கொழும்பு ஃபோர்ட் நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, நீதிபதி நிலுபுளி லங்காபுரா முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையின் வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஸ்பெயினின் தக்காளி திருவிழாவுக்கு 80 வயது! சிறுவர்கள் போட்ட சண்டையால் வந்த விழா!

It has been reported that a court in Sri Lanka has granted bail to former President Ranil Wickremesinghe.

ஸ்பெயினின் தக்காளி திருவிழாவுக்கு 80 வயது! சிறுவர்கள் போட்ட சண்டையால் வந்த விழா!

ஸ்பெயின் நாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, ஒட்டுமொத்த தெருவையும் தக்காளியால் சிவப்பு வண்ணமாக்கும் தக்காளி திருவிழாவின் 80ஆம் ஆண்டு கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெறவிருக்கிறது.இந்த திருவிழா, ஆண்டுதோறும... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் புதிதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தானில் புதியதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2025-ல் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தைச் சேர்ந்த 16 மாத பெண் கு... மேலும் பார்க்க

மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!

காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தியாளர்களில், தி அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் பகுதிநேர புகைப்படக் கலைஞர் மரியம் டக்காவும் ஒருவர்.போரின் கோர முகத்தை உல... மேலும் பார்க்க

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனமழை! வியத்நாமில் வீசிய புயலால் 3 பேர் பலி!

தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில், கனமழை பெய்து வரும் சூழலில், வியத்நாமில் வீசிய கஜிகி புயலால் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியத்நாம் நாட்டில், வீசிய வெப்ப மண்டல புயலால், பெய்த கனமழையின... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுமார் 24,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பருமழை தொடங்கியது முதல், பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் தொடர் வெள்ள... மேலும் பார்க்க

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

ஈரான் அரசுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த 2024 அக்டோபரிலும், மெல்ப... மேலும் பார்க்க