காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சி...
3 பிஎச்கே படத்தை ரசித்தேன்! சச்சின்
3 பிஎச்கே திரைப்படத்தை பார்த்து ரசித்ததாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த்தின் 40-வது படமாக உருவான 3பிஎச்கே திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார்.
இதில் சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சொந்த வீட்டை வாங்க ஒரு நடுத்தர குடும்பம் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதைப் படம் பதிவுசெய்திருந்தது.
தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகியிருக்கும் நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பார்த்து ரசித்ததாக தெரிவித்துள்ளார்.
ரெடிட் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சச்சின் பதிலளித்துக் கொண்டிருந்த நிலையில், ”நீங்கள் எப்போது திரைப்படம் பார்ப்பீர்கள், உங்களுக்கு பிடித்த படம் எது?” என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்திருக்கும் சச்சின், நேரம் கிடைக்கும்போது படம் பார்ப்பது உண்டு, சமீபத்தில் 3 பிஎச்கே மற்றும் அட தம்பாய்ச்சா நாய் திரைப்படங்களை கண்டு ரசித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

சச்சினின் பதிவை பகிர்ந்துள்ள இயக்குநர் ஸ்ரீ கணேஷ், "நன்றி சச்சின் சார். நீங்கள் எனது சிறுவயது ஹீரோ” எனக் குறிப்பிட்டுள்ளார்.