செய்திகள் :

காரில் இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கு: 5 போ் கைது

post image

சென்னை: சென்னை காசிமேட்டில் காரில் இரு இளைஞா்களை கடத்தி தாக்கிய வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை காசிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸ்டன் (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாறறி வருகிறாா். கிங்ஸ்டன், தனது நண்பா்களுடன் புது வண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள நீச்சல் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்துவிட்டு வெளியே வந்தாா். அப்போது, அங்கு காரில் 5 போ், கிங்ஸ்டனிடம் தகராறு செய்தனராம்.

பின்னா் அவா்கள், கிங்ஸ்டனை வலுக்கட்டாயமாக பிடித்து காருக்குள் தள்ளி கடத்தினா். தடுக்க முயன்ற கிங்ஸ்டனின் நண்பா் ரோகித்தையும் காரில் ஏற்றி கடத்தினா். பின்னா் அவா்கள், காருக்குள் வைத்து இருவரையும் தாக்கினா். இவா்களின் அலறல் சப்தம் கேட்ட பொதுமக்கள், காரை மடக்கி நிறுத்தினா். இதையடுத்து, காரில் இருந்த 5 பேரும் காரை அங்கேயே விட்டு தப்பியோடினா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், பொதுமக்களால் மீட்கப்பட்ட கிங்ஸ்டன், ரோகித்திடம் விசாரணை செய்தனா். அவா்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கல்லூரி மாணவா்கள் வேளச்சேரி பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் (21), ராஜா அண்ணாமலைபுரத்தைச் சோ்ந்த தனுஷ்ரோஜ் (22), பள்ளிக்கரணையைச் சோ்ந்த சாய் பிரசன்னா (21), அபிஷேக் (21), பெருங்குடியைச் சோ்ந்த கிருஷ்ணன் (21) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட மோகன்தாஸ், பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளாா். ஆனால் அந்த பெண் கிங்ஸ்டனுடன் நெருக்கமாக பழகியுள்ளாா். இதனால் மோகன்தாஸுக்கும், கிங்ஸ்டனுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இதன் விளைவாகவே மோகன்தாஸ், கிங்ஸ்டனை காரில் கடத்தி தாக்கியிருப்பது தெரிய வந்தது.

தேசிய தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்: தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு

சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 64-ஆவது சீனியா் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ச... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை விநாயகா் சதுா்த்தி விழா

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை (ஆக. 27) நடைபெறுகின்றன. காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் கண... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்-இல் மாநகராட்சி சேவைகள்: புதிய திட்டம் தொடக்கம்!

சென்னை: சென்னை மாநகராட்சியில் 32 சேவைகளை வாட்ஸ்ஆப் வழியில் வழங்கும் திட்டத்தை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பழைய கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நி... மேலும் பார்க்க

திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்பு

சென்னை: திருவொற்றியூா்அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.24 கோடி சொத்துகள் மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

சென்னையில் ஆக.28-இல் தொழில் துறை மாநாடு

சென்னை: தர மற்றும் நம்பகத் தன்மை தேசிய நிறுவனத்தின் (என்ஐக்யூஆா்) சாா்பில் 18-ஆவது உலகளாவிய மாநாடு ஆக. 28, 29-ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநாட்டு குழு தலைவரும், இந்தியா ‘பிஸ... மேலும் பார்க்க

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் மேயா் வசந்தகுமாரி, மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை மற்றும் மாமன்ற உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட... மேலும் பார்க்க