செய்திகள் :

TTV Dinakaran: "எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என நம்பினோம்; ஆனால்" - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

post image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக்காமல் அதிமுக-வை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்து தீவிரமாகத் தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார்.

இதற்கிடையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணியிலிருந்து விலகியிருக்கிறார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

இந்நிலையில் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியிலிருந்து விலகியது குறித்துப் பேசும்போது, "எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என நம்பினோம். ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை. துரோகம் தலைவிரித்து ஆடுகிறது. தான் துரோகம் செய்தது சரி என்பது போல ஊர் முழுக்கச் சென்று ஆணவத்துடன் பேசி வருகிறார்.

அம்மாவின் தொண்டர்கள் இணைந்து 'சரியான முதலமைச்சர் வேட்பாளரை' தருவார்கள் என இத்தனை காலம் பொறுமையாக இருந்தோம். அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்துவிட்டது. அதனால்தான் நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். அமமுக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`விஜய் கட்சி, அந்த 2 சமூக வாக்குகளை டார்கெட் செய்கிறது’ - 9 தொகுதிகளை அலசிய அமைச்சர் எ.வ.வேலு

செப்டம்பர் 3-ம் தேதியான நேற்று... வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் தி.மு.க-வின் வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை... மேலும் பார்க்க

GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்வதென்ன?

ஜிஎஸ்டி மாற்றம்:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (புதன்கிழமை) இரவு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இரண்டு அடுக... மேலும் பார்க்க

திமுக பெண் கவுன்சிலர் காலில் நகராட்சி ஊழியர் விழுந்த விவகாரம்! – 10 பேர் மீது வன்கொடுமை வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முனியப்பன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், 20-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரம்யா என்பவருக்கும் இடையேய... மேலும் பார்க்க

திண்டிவனம்: "மன்னிப்பு கேட்பது போல என் இடுப்பில் கை வைத்தார்" - திமுக பெண் கவுன்சிலர் புகார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் முனியப்பன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், பிரபல சாராய வியாபாரியான மரூர் ராஜாவின் மனைவியும், 20-வது வார்ட... மேலும் பார்க்க

பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி: கொள்கை, அரசியல் வித்தியாசம் என்ன? -தவெகவுக்கு சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது வாக்குப் பதிவு நேர்மையாக தான் நடந்தது என்பதை எங்கு வந்து ... மேலும் பார்க்க

கழுகார்: கிளம்பிய இனிஷியல் தலைவர் டு 'ஐஸ்' வைக்கும் கனவுப் புள்ளி வரை!

கொதிக்கும் நலத்துறை அதிகாரிகள்!பாலுக்குக் காவலாக பூனையா?சமூகத்திற்கு நன்மை செய்ய உருவாக்கப்பட்ட துறையில், சமீபக்காலமாக மோசடி, ஊழல் புகார்கள் அதிகரித்து வருகிறதாம். அந்தத் துறையில், பணம் அதிகமாகப் புழங... மேலும் பார்க்க